தமிழகம்

பல்வேறு நிகழ்வுகளில் இறந்த 23 போலீஸார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

உடல்நலக்குறைவு, விபத்தில் இறந்த காவல்துறையைச் சேர்ந்த 23 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றிய ஜி.நடராஜன், எஸ்.ஷாஜகான், குணசேகரன், வி.கோவிந்தராமன், சேலம் பி.முத்துச்சாமி, தூத்துக்குடி மாவட்டம் செல்வம், புதுக்கோட்டை ஜெ.மார்ட்டின் கென்னடி, நாகை மாவட்டம் வி.சிங்கார வடிவேலன், திருவண்ணாமலை மாவட்டம் அன்பழகன், திருப்பூர் மாவட்டம் கே.ராஜன், விருதுநகர் பொம்மன் ஆகியோர் உடல் நலக்குறைவால் இறந்தனர்.

அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் மோகன், வேலூர் மாவட்டம் என். பலராமன், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.ரமேஷ் மற்றும் சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த வி.நடராஜன், வி.முருகன், ஆர்.மகபூப் பாஷா ஆகியோர் மாரடைப்பால் இறந்தனர்.

மேலும், திருச்சியைச் சேர்ந்த ஆர்.ஆனந்த், கடலூர் மனோகர், விழுப்புரம் ஏ.வெங்கட்ராஜன், விருதுநகர் மருதன் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். அதேபோல் சென்னை பெருநகர காவல் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவில் தலைமைக் காவலராக இருந்த பழனி, வீட்டில் மின்சாரம் பாய்ந்ததில் இறந்தார். பல்வேறு நிகழ்வு களில் இறந்த 23 காவலர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப் படும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT