பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சிங்காரத்தை கடந்த ஆண்டே திருச்செந்தூரில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டனர். போலீஸார் உஷார் அடைந்ததால் அப்போது சிங்காரம் தப்பினார். சுமார் 8 மாதங்கள் காத்திருந்த கும்பல் நேற்று பழியைத் தீர்த்துக் கொண்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்ப நாடு பகுதியில் கடந்த 8.1.2016-ல் காவலரை தாக்கியதாக சிங்காரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மறுநாள் 9.1.2016-ல் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்ததாக போலீ ஸார் அவரை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில், காவலரை தாக்கிய வழக்கு தொடர்பாக நேற்றுமுன் தினம் தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிங்காரத்தை போலீ ஸார் ஆஜர்படுத்தினர். ஜெலட்டின் குச்சி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன் றத்தில் ஆஜர்படுத்த அவரை நேற்று அழைத்து வந்தபோதுதான் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மூலக் கரையை சேர்ந்த வெங்கடேச பண்ணையார் தரப்பினருக்கும், தேவேந்திரகுல வேளாளர் கூட்ட மைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் தரப்பினருக்கும் கடந்த 24 ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. இதுவரை இருதரப்பையும் சேர்ந்த 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ள னர். வெங்கடேச பண்ணை யார், பசுபதி பாண்டியன் ஆகிய இருவருமே தற்போது உயிரோடு இல்லை. இருப்பினும் இரு தரப் புக்கும் இடையேயான பகை மறையவில்லை.
வெங்கடேச பண்ணையா ருக்கு பின்னர், அவரது அமைப்பை நடத்தி வரும் சுபாஷ் பண்ணை யாரை கொலை செய்ய பசுபதி பாண்டியன் தரப்பினர் கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி முயற்சி மேற்கொண்டனர். பழையகாயல் அருகே தோட்டத்தில் புகுந்து பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் சுபாஷ் பண்ணையார் தப்பினார். ஆனால், அவரது தரப்பை சேர்ந்த 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கில் பழிவாங்கவே சிங்காரம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சிங்காரம் மீது ஏற்கெனவே ஒரு முறை இதேபோல் தாக்குதல் முயற்சி நடந்தது. கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கடந்த 28.6.2016 அன்று திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்த சிங்காரம் அழைத்து வரப்பட்டார். அப்போது மர்ம நபர் கள் மிளகாய் பொடி கரைசலை வீசி தாக்குதல் நடத்த முயன்ற னர். ஆனால், போலீஸார் உஷா ரானதால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.
இந்த 2 சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.