தமிழகம்

கள்ள வாக்குகளை தடுக்க நோட்டா பயன்படும்: முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு

செய்திப்பிரிவு

கள்ள வாக்குகளை தடுக்க நோட்டா வசதி பயன்படும் என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார். யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாததால், வீட்டிலேயே இருந்து விடாமல் நோட்டாவுக்காவது வாக்களித்தால் கள்ள வாக்குகளை தடுக்கலாம் என்றார்.

சென்னை மெரினா கடற்கரை யில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பணம், பரிசு, சாதி, மதம் என எந்த காரணத்துக்காகவும் விற்கக் கூடாது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாக்களிப்பது கட்டாய மாக உள்ளது. ஆனால், நாம் ஜனநாயக நாட்டில் இருப்பதால் இது கட்டாயமாக்கப்படவில்லை. எனினும் நமது தார்மீக பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.

நோட்டாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று கூற முடியாது. மேலை நாடுகளில் 50% மேல் நோட்டாவுக்கு வாக்களித்

தால் மறு முறை தேர்தல் நடத் தப்படும். ஆனால் நமது நாட்டில் அப்படியில்லை. நோட்டாவுக்கு அதிக வாக்குகிடைத்தால் அரசியல் கட்சிக ளுக்கு தங்களது வேட்பாளர்கள் சரியில்லை என்று மக்கள் மறைமுகமாக செய்தி சொல்கிறார்கள் என்று அர்த்தம்.

அரசியல் பிரச்சாரங்கள் மற்றவர்களை குறை கூறுவதாக, விமர்சிப்பதாக இருக்கின்றன. ஆனால், தங்களது சாதனைகளை, நல்ல செயல்களை விளக்கி மக்க ளிடம் வாக்கு கேட்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

மனுநீதி நுகர்வோர், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், ஸ்மார்ட் லீடர்ஸ் என்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய பேரணியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ்மார்ட் லீடர்ஸ் மையத்தின் நிர்வாக இயக்குநர் சிவராஜ் வேல், மனுநீதி மையத்தின் தலைவர் வழக்கறிஞர் முனிராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

SCROLL FOR NEXT