ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது. அதில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை அருகே உள்ள கல்லூர ணியைச் சேர்ந்த 14 பேர் ஒரு வேனில் நேற்று அதிகாலை ராமேசு வரத்துக்கு சுற்றுலா சென்றனர். வேனை அழகேசன் என்பவர் ஓட்டிச் சென்றார். பாம்பன் பாலத்தில் அதிகாலை 6 மணி அளவில் வேன் சென்றபோது லேசான மழை தூறியது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாகச் சென்று பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி நின்றது. வேன் கடலில் கவிழாமல் அதில் இருந்த சுற்றுலாப் பயணிகளும், வேன் ஓட்டுநரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பாலத்தில் நின்றிருந்த பொதுமக்களும், போலீஸாரும் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.