தமிழகம்

இலங்கை போரில் உயிழந்தவர்களுக்காக ராமேசுவரம் கடற்கரையில் மலர்தூவி அஞ்சலி

செய்திப்பிரிவு

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது உயிரிழந்தவர்களுக்காக மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற தமிழினப் படுகொலை இடம் பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் திரளான பொது மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டு பங்கேற்ற போரின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பாக இலங்கை போரில் உயிரிழந்தவர்களுக்காக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் திதி கொடுக்கப்பட்டது. இதில் திரளான இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

          
SCROLL FOR NEXT