திருவண்ணாமலை கிரிவலப் பாதையை அகலப்படுத்துவதற் காக மரங்களை வெட்டுவதற்கு எதிரான வழக்கில், ஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலையில் கிரி வலப் பாதை விரிவாக்கப் பணியில் மரங்கள் வெட்டப்படுவதாக ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில், கிரிவலப் பாதை விரிவாக்கப் பணிக்கும், அப்பணிக்காக மரங்களை வெட்ட வும் இடைக்காலத் தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட் டுள்ளது.
இதற்கிடையில், தடையை மீறி மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கக் கோரி திருவண்ணா மலையைச் சேர்ந்த ஜெ.முகிலன் என்பவரும், மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த பி.கே.தனஞ்செயன் என்பவரும், சோனகிரி மலையில் உள்ள மரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் குளங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணகுமார் என்பவரும் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர்.
குழு நியமனம்
இதை விசாரித்த அமர்வு, கிரிவலப் பாதையை அகலப் படுத்தும் திட்டத்தை, மரங்களை வெட்டாமல் செயல்படுத்துவது குறித்து நேரில் ஆய்வு செய்ய வும், பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெ.ஏ.கே.சம்பத்குமார், முன்னாள் வனத்துறை அதிகாரி வி.சேகர் ஆகியோரை நியமித்திருந்தது.
இந்நிலையில் இந்த மனுக்கள் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ப்பட்டது. அதனைத் தொடர்ந்து, “இறுதி அறிக்கை குறித்த ஆட்சே பங்களை, மனு மீதான அடுத்த விசாரணையின்போது தெரிவிக் கலாம்” என்று அமர்வின் உறுப்பி னர்கள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.