தமிழகம்

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்கம் வெளியிட்டது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடியாது. மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்கம் வெளியிட்டது. 4974 மாணவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தரவரிசைப் பட்டியல்> www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT