வட கிழக்கு பருவ மழை அடுத்த வாரம் தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்கிய காலத்தில் வங்கக் கடலில் தொடர்ந்து புயல் சின்னங்கள் உருவாகிக் கொண்டே இருந்தன. குறிப்பாக பைலின், ஹெலன், லெஹர், மாதி ஆகிய புயல் சின்னங்கள் உருவாகின. அவற்றில் முதல் 3 புயல்கள் ஆந்திரப் பிரதேசம், ஒடிஸா நோக்கிச் சென்றுவிட்டன.
அதன் பின் உருவான காற்றுத் தாழ்வு நிலை மற்றும் மாதி புயல் காரணமாக தமிழகத்தில் ஓரளவு மழை பெய்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவ மழை வரும் 10-ம் தேதி தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் அறியப்படுகின்றன'' என்றனர்.