ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரி வித்து புதுக்கோட்டை மாவட்டத் தில் நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, வடகாடு மற்றும் கீரமங் கலத்தில் நேற்று நடைபெற்ற போராட்டங்களில் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் கலந்துகொண் டனர். கீரமங்கலத்தில் தொடர் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர்.
நெடுவாசலில் 19-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பெண் கள், இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் ஆலங் குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ. மெய்யநாதன் பேசியபோது, “ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்ததைப்போல, எரி வாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யவும் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதுகுறித்து சட்டப் பேரவையில் திமுக வலியுறுத்தும். மத்திய அரசு இந்த திட் டத்தை ரத்து செய்யும்வரை போராட் டத்தை நடத்துவோம்” என்றார்.
போராட்டத்தை ஆதரித்து திரைப்பட இயக்குநர் சசிகுமார் உள்ளிட்டோர் பேசினர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகு தியைச் சேர்ந்த புரட்சியாளர் இளை ஞர் எழுச்சி மாணவர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சதா.சிவக்குமார் தலைமையிலான மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
2-வது நாளாக போராட்டம்
வடகாடு கடைவீதியில் 2-வது நாளாக நேற்று போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தை ஆதரித்து திரைப்பட இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்டோர் பேசினர். கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே தொடர் போராட்டம் நடத்த மக்கள் ஆயத்தமாகினர். அப்போது, அங்கு வந்த ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலிபு தலைமையி லான போலீஸார், தொடர் போராட் டம் நடத்த தடை விதித்தனர். நல்லாண்டார் கொல்லையில் நேற்றும் போராட் டம் நடைபெற்றது.