தமிழகம்

சென்னை மாநகராட்சியில் 57 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பயன்களையும், பணியின்போது உயிரி ழந்த 57 பணியாளர்களின் வாரிசுதாரர் களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும் மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பயன்களை துரைசாமி நேற்று வழங்கினார். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சென்னை மாநகராட்சியில் 240 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியப் பயன்களாக ரூ.13.88 கோடி வழங்கப்பட்டது. மாநகராட்சி யில் பணிபுரிந்து பணியின்போது உயிரி ழந்த குடும்பத்தினரின் வாரிசுதாரர்கள் 57 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மேயர் வழங்கினார். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.10.98 கோடி யும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.6.22 கோடியும் வழங்கப்பட்டுவருகிறது.

SCROLL FOR NEXT