நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் கொளப்பாடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(55), எரவாஞ்சேரி ஊராட்சி உத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(70), அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (52) ஆகி யோர் விவசாயம் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (52). தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்த இளங்கோவன், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டம் ராமாயிபனையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியண்ணன்(55) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.