தமிழகம்

தேர்தல்களில் மக்கள்தான் எஜமானர்கள்: ஸ்டாலின் கருத்து

செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் தேர்தல்களில் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை நிரூபித்துள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஐந்து மாநில தேர்தல்களில் மக்கள் தான் எஜமானர்களாக இருக்கக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் வாக்களித்து, வெற்றி பெற்று இருக்கக்கூடியவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில், பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்து இருக்கக்கூடிய சூழ்நிலையை பார்க்கின்றபோது, விரைவில் தமிழகத்தில் நடைபெற இருக்கக்கூடிய தேர்தலிலும் நிச்சயமாக ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவிற்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது" என்றார்.

SCROLL FOR NEXT