தமிழகம்

திமுகவை கண்ணியமாக நாங்கள் நடத்தினோம்: பாஜக

செய்திப்பிரிவு

எங்கள் கூட்டணியில் இருந்தபோது திமுகவை கண்ணியமாக நடத்தினோம் என்று பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னையில் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

சரியான தலைமை இல்லாத அரசாகத்தான் மத்திய அரசு இதுவரை செயல்பட்டு வருகிறது. அதனால்தான், இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் வைத்து ஒப்புதல் பெற்ற பின்னர், அதை மத்திய அமைச்சரவையில் வைத்து திருத்தம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும். ஆனால், காங்கிரஸ் அப்படிச் செய்யவில்லை.

தெலங்கானா விவகாரத்தில், காங்கிரஸ், முதலில் தனது கட்சி முதல்வரை திருப்திப்படுத்தட்டும்.

தமிழகத்தில் கூட்டணிக்கான முயற்சிகளை பா.ஜ.க. இன்னும் தொடங்கவில்லை. தேர்தலுக்கு நான்கு மாதங்கள் உள்ளன. திமுகவைப் பொறுத்தவரை, அவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தபோது எவ்வளவு கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்கள் என்பதும் காங்கிரஸ் கூட்டணியில் எப்படி நடத்தப்பட்டனர் என்பதும் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT