தமிழகம்

டெல்லியில் போராட்டம் நடத்துவது தொடர்பாக 21-ம் தேதி முடிவு: முதல்வரை சந்தித்த பிறகு அய்யாகண்ணு தகவல்

செய்திப்பிரிவு

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்துவது பற்றி 21-ம் தேதி முடிவெடுக்கப்படும் என விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, நேற்று தமிழக முதல்வர் கே.பழனி சாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அவருடன், மாநில துணைத்தலைவர் கிட்டப்பா ரெட்டி உள்ளிட்டவர்கள் இருந் தனர். சந்திப்புக்கு பிறகு பத்திரிகை யாளர்களிடம் அய்யாகண்ணு கூறியதாவது:

தமிழகத்தில் 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும், தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகளில் விவ சாயிகள் வாங்கிய கடனுக்காக வழக்கு தொடர்வதை தடுக்க வேண்டும், கரும்புக்கான நிலு வைத்தொகையை பெற்றுத் தரவேண்டும், ஏரி குளங்களை தூர்வாரி விவசாயிகளும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை முதல்வரிடம் வலியுறுத்தி யுள்ளோம்.

வரும் 18-ம் தேதி நாங்கள் மீண்டும் டெல்லி சென்று, பல் வேறு மாநில விவசாயிகள் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசவுள் ளோம். அதன் பின், விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தை முற்றுகை யிடுவதா? அல்லது தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதா என்பதை 21-ம் தேதி முடிவு செய்கிறோம். அதற்கு முன், வரும் 18-ம் தேதி தமிழக முதல்வர் அழைத்துள்ளார். அவரை சந்தித்துவிட்டு செல் வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT