தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் தமிழகத்தில் மொத்தம் 44 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டு தோறும் சுழற்சி அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டு வரு கிறது. ராஜீவ்காந்தி சாலையில் மொத்தம் 20 கி.மீ தூரத்துக்கு (பழைய மகாபலிபுரம் சாலை) பெருங்குடி, துரைப்பாக்கம், ஏகாட் டூர், சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 5 இடங்களில் சுங்கச்சா வடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சுங்கச்சாவடிகளில் 2 ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப் படுகிறது. இந்நிலையில் இந்த சுங்கச் சாவடிகளில் நேற்று நள்ளிரவு (ஜூன் 1) முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தின் தலைவர் ஆர்.சுகுமார் கூறும் போது, “நெடுஞ்சாலை களைப் பராமரிப்பதற்காக ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்தப் படுகிறது. ஆனால், சாலைகள் முழுமையாக பராமரிக்கப் படுவதில்லை. சாலையில் போதிய மேம்பாலங்களோ, மின் விளக்கு களோ இல்லை. அவசர காலத் தில் விபத்தில் சிக்கியவர்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை, சில இடங்களில் சர்வீஸ் சாலைகள் இல்லை. தேவையான வசதிகளை செய்யா மல் கட்டணத்தை மட்டும் உயர்த் துவதால் கூடுதல் செலவு ஏற்படு கிறது. எனவே, நெடுஞ்சாலை களில் பராமரிப்பு பணிகளை மேற் கொண்டு, அடிப்படை வசதி களை மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.
கட்டணம் பற்றிய விவரம் வருமாறு: