தமிழகம்

ராகுலின் தைரியம் வெளிப்பட்டுள்ளது: இளங்கோவன் கருத்து

செய்திப்பிரிவு

அவசரச் சட்டத்தை எதிர்த்தன் மூலம் ராகுல் காந்தி தனது தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளதாக, தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அவசரச்சட்டம் குறித்து மத்திய அமைச்சரவை விவாதித்தது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தெரியாது. அந்தச் சட்டத்தை எதிர்த்ததன் மூலம் அவர் தனது தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ., எம்.பிக்களுக்கு ஆதரவாத அவசரச் சட்டத்தை முட்டாள்தனமாது என்றும், அதைக் கிழித்து எறிய வேண்டும் என்றும் ராகுல் கூறியதற்கு, இளங்கோவன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா குறித்து அவர் கூறும்போது, “இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில், திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்காதது ஏற்புடையதல்ல” என்று இளங்கோவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT