தமிழகம்

ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார்: மத்திய அரசு அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை - டெல்லி உட்பட 6 இடங்களில் சோதனை

செய்திப்பிரிவு

ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பான புகாரில் மீனம்பாக் கத்தில் உள்ள மத்திய மண்டல பயிர் பாதுகாப்பு மைய இணை இயக்குநர்களிடம் சிபிஐ அதிகாரி கள் விசாரணை நடத்தினர்.

மத்திய அரசின் மண்டல பயிர் பாதுகாப்பு மையம், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ளது. விவ சாய பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு இந்நிறுவனத்திடம் தரச்சான்று பெற வேண்டும். பல்வேறு நிறு வனங்கள் இந்நிறுவன அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்து தரச் சான்று பெறுவதாக சிபிஐ அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே கிடைத்த தகவலின்பேரில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், உள்ளூர் விமான முனையத்தில் நின்றுகொண்டி ருந்த 2 பேரை பிடித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். அவர்களிடம் நடத்திய சோத னையில் ரூ.7 லட்சத்து 10 ஆயிரம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

விசாரணையில், அவர்கள் மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசின் மண்டல பயிர் பாதுகாப்பு மையத்தின் இணை இயக்குநர்கள் மாணிக்கம், சத்திய நாராயணன் என்பது தெரிந்தது. அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் அலுவலக அறையி லும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். உதவி பயிர் பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமாரிடமும் விசா ரணை நடத்தினர்.

அதே நேரத்தில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்க ளூரு, மதுரை ஆகிய இடங்களில் உள்ள மத்திய அரசின் மண்டல பயிர் பாதுகாப்பு மையத்திலும் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி, அங்கு பணிபுரி யும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். சில ஆவணங்களையும் கைப்பற்றி சென்றனர்.

SCROLL FOR NEXT