தமிழகம்

பேசும் படங்கள்: போர்க்களமான தலைநகரம்!

செய்திப்பிரிவு


அப்புறப்படுத்தும் போலீஸாருக்கும், வெளியேற மறுக்கும் இளைஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போர்க்களமாக மாறிய மெரினா போராட்டக்களம். | படம்: க.ஸ்ரீபரத்


தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மற்ற போலீஸார் அழைத்து வருகின்றனர். | படங்கள்: ம.பிரபு, க.ஸ்ரீபரத்


மெரினாவில் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்கும் போலீஸ். | படம்: க.ஸ்ரீபரத்


நடுக்குப்பத்தில் ஒருவரை சுற்றிவளைத்து அடிக்கும் போலீஸார். | படம்: க.ஸ்ரீபரத்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மிக கண்ணியத்துடனும் கட்டுக்கோப்புடனும் சென்னை மெரினாவில் நடத்தப்பட்டுவந்த இளைஞர்கள், மாணவர் போராட்டம் இறுதிக்கட்டத்தில் திடீரென திசைமாறி, நேற்று வன்முறையில் முடிந்தது. மெரினா கடற்கரையில் இருந்து போலீஸார் அப்புறப்படுத்தியதால் கடலோரம் மட்டுமல்லாது, கடலிலும் இறங்கிப் போராட்டம் நடத்திய இளைஞர்கள். | படம்: எல்.சீனிவாசன்


ஐஸ்அவுஸ் காவல் நிலைய வாகனங்களை கீழே சாய்த்து தீவைத்துக் கொளுத்திய வன்முறையாளர்கள். | படம்: க.ஸ்ரீபரத்


நடுக்குப்பத்தில் பெட்ரோல் குண்டு வெடித்ததில் கார் பற்றியெரிகிறது. அடுத்த பெட்ரோல் குண்டு வீசத் தயாராகும் கலவரக்காரர்கள். | படம்: ம.பிரபு


தீக்கிரையாக்கப்பட்ட நடுக்குப்பம் மீன் சந்தை. | படம்: எல்.சீனிவாசன்


தாக்குதலில் காயமடைந்தவர்களை தூக்கிவரும் போலீஸார். | படங்கள்: ம.பிரபு


ஐஸ்அவுஸ் பகுதியில் ஒருவரை நையப்புடைக்கும் போலீஸ். | படம்: க.ஸ்ரீபரத்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த ஒரு வாரம் முன்பு தொடங்கப்பட்டு நாட்டையே வியப்புடன் திரும்பிப் பார்க்கவைத்த இளைஞர்கள், மாணவர் போராட்டம் எதிர்பாராத வகையில் நேற்று வன்முறையில் முடிந்ததால், சென்னையே கலவர பூமியாக மாறியது. போராட்டக்காரர்கள் கடலிலும் இறங்கத் தொடங்கியதால் கடலோரக் காவல்படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து சுற்றியபடி கண்காணிப்பில் ஈடுபட்டனர் | படம்: ம.பிரபு


தண்ணீர் தொட்டியை போலீஸாரை நோக்கி உருட்டிவிட்டு, அதன் மறைவில் இருந்தபடி தாக்குதல் நடத்துகின்றனர்.


போலீஸாரை நோக்கி பாட்டில்களை வீசுகின்றனர்.


கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு போலீஸாரை தாக்கத் தயாராகும் கலவரக்காரர்கள். இடம்: சென்னை நடுக்குப்பம். | படங்கள்: ம.பிரபு


இளைஞர்களை கலைந்துபோகச் சொல்லி எச்சரிக்கிறார் கூடுதல் ஆணையர் சங்கர்.


போராட்டக் கோரிக்கை நிறைவேறிவிட்டதால், மெரினாவில் இருந்து இளைஞர்களை வெளியேறச் சொல்லி மைக்கில் வேண்டுகோள் விடுக்கிறார் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன். | படங்கள்: க.ஸ்ரீபரத்

SCROLL FOR NEXT