ஐந்து கொலைகளை அரங்கேற்றிய ஜோதிடர் கண்ணன் திங்கள்கிழமை காவல்துறையினரின் மூன்று நாள் விசாரணை முடிந்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் ஆஜர் செய்யப்பட்டார். அவரை குற்றவியல் நடுவர் திலீப் டிசம்பர் 20-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கண்ணன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஐந்து கொலை வழக்கு களையும் சேர்த்து விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவினர் கொலைக் குற்றவாளி ஜோதிடர் கண்ணனிடம் பல கட்ட விசா ரணை நடத்தியதுடன் தங்களது விசாரணை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
இனி சாட்சிகளைத் தயார் செய்வது, சிறையில் குற்றவாளிகளை சாட்சிகள் அடையாளம் காட்டுவது, திரட்டிய ஆவணங்கள், ஆதா ரங்கள் ஆகியவற்றைத் தொகுத்து குற்றப்பத்திரிகை தயார் செய்வது ஆகிய பணி களை மேற்கொள்ள வேண்டும்.
ஐந்து கொலை வழக்குகள் என்பதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாம். இந்தப் பணியை 3 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.