தமிழகம்

ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு

செய்திப்பிரிவு

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கடந்த 2002-ம் ஆண்டு ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்பிரமணியம், அப்பு, கதிரவன், மீனாட்சி சுந்தரம், ஆனந்த், கண்ணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் ரவிசுப்பிர மணியம் அப்ரூவராக மாறினார்.

இந்த வழக்கு விசாரணையின் போது கதிரவன், அப்பு ஆகியோர் இறந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி இந்த வழக்கில் இருந்து ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரையும் சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து உத் தரவிட்டது. இந்த விடுதலை உத் தரவை எதிர்த்து தமிழக அரசு சார் பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT