காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருந்ததால்தான் திமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இக்கட்டிடத்தை திறந்து வைத்து ப.சிதம்பரம் பேசும்போது, ''காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பலவீனமாக இருந்ததால், திமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. இதில் மகிழ்ச்சி இல்லை என்றாலும் கடமை இருப்பதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பாடுபடுவோம்'' என்றார்.
தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.