சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக என்.ஆதிநாதன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
சென்னை மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றியவர் என்.ஆதிநாதன். கடந்தாண்டு இவரது பெயர், உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் நியமனக் குழு ஏற்றுக் கொண்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி என்.ஆதிநாதனை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதியாக என்.ஆதிநாதன் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி உயர் நீதிமன்ற நூலக அரங்கில் நேற்று நடந்தது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆதிநாதன் பதவியேற்றுக் கொண் டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து, நீதிபதி ஆதிநாதனை அட்வகேட் ஜென ரல் ஆர்.முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அவர்களுக்கு நீதிபதி ஆதிநாதன் நன்றி தெரிவித்தார்.
புதிதாக நீதிபதி ஆதிநாதன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 39 ஆனது. நீதிபதிகள் காலிப்பணி யிடங்கள் எண்ணிக்கை 36 ஆகியுள்ளது.