தமிழகம்

‘ஷேல் கேஸ், மீத்தேன் எடுக்கும் திட்டம் ஓ.என்.ஜி.சியிடம் இல்லை’

செய்திப்பிரிவு

காரைக்கால் ஓஎன்ஜிசி காவிரிப் படுகை அலுவலகம் நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ஷேல் கேஸ், நிலக் கரி மீத்தேன் எதுவும் ஓஎன்ஜிசி நிறுவனம் எடுக்கவில்லை. எடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை. காவிரி டெல்டா பகுதி கிராம மக்களின் தவறான புரிதலால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. டெல்டா பகுதிகளில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு ஓஎன்ஜிசியால், எந்தவொரு பகுதியிலும் விவசாயம் பாதிக்கப்படவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிக பயிர்சேதம் மட்டுமே நேர்ந்துள்ளது. அதற்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களும், ஓஎன்ஜிசி செயல்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஒருசிலரால் பரப்பப்படும் புரளியையோ, தவறான கருத்து மற்றும் தகவல்களையோ நம்ப வேண்டாம்.

SCROLL FOR NEXT