தமிழகம்

வக்பு வாரிய தலைவர், உறுப்பினர்கள் விரைவில் தேர்வு

செய்திப்பிரிவு

வக்பு வாரிய தலைவர், புதிய உறுப்பினர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர் என அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நேற்று நடந்தது. இதில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் தொகுதி உறுப்பினர் முகமது அபுபக்கர், ‘‘வக்பு வாரிய தலைவர், உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. புதிய வக்பு வாரியத்தை அமைக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நிலோபர் கபீல், ‘‘வக்பு வாரியத்தின் பதவிக்காலம் 2017-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி வரை உள்ளது. வாரிய தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும், வக்பு வாரியத்தில் எம்.பி., எம்எல்ஏக்களும் உறுப்பினராக பதவி வகிப்பர். அவர்களுக்கான இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய உறுப்பினர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர்’’ என்றார்.

SCROLL FOR NEXT