தமிழகம்

குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது காவல் ஆணையரிடம் புகார்

செய்திப்பிரிவு

சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள் நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகை குஷ்பு, லட்சுமி ராம கிருஷ்ணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

"பிரபல தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நிஜங்கள், சொல்வ தெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகள் மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை மீறி நடத்தப்படுகின்றன. வன் முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் 2011-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. அதை மீறி இந்த நிகழ்ச்சிகளில் குழந்தை களை காட்டுகின்றனர். மேலும், நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தை களை பயன்படுத்துகின்றனர். கவுன்சலிங் கொடுப்பவர்கள் அதற்கான முறையான படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்திய சமூகம், கலாச்சாரம், ஒழுக்கத்துக்கு எதிராக இந்த நிகழ்ச்சிகள் உள்ளன.

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின் றன. இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகள் குஷ்பு, லட்சுமி ராம கிருஷ்ணன் ஆகியோர் மோசமான வார்த்தைகளை பேசுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளை வெளியிடும் தொலைக்காட்சி நிறுவனங்கள் கேபிள் டிவி சட்டத்துக்கு எதிராக செயல்படுகின்றன. குடும்ப கலாச் சாரம், உறவுகளை அவமானப்படுத் தும் இந்த நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், இந்திய சட்டங்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளை தடை செய்து, நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT