தமிழகம்

கர்நாடகத் தமிழர்கள் கவனத்துக்கு... - உங்கள் பகுதி நிலவரம் என்ன?

செய்திப்பிரிவு

தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் வன்முறைகள் தீவிரமடைந்தது. இதையடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் தமிழகத்துக்கான அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி வைத்துள்ளது. மைசூருவில் கடைகள் மூடப்பட்டுள்ளன. மைசூரு சாலையில் ஒட்டுமொத்தமும் குழப்பமான நிலை நீடிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஐடி துறையைச் சார்ந்தவர்கள், தமிழ்நாடு பதிவு வாகனங்களை எடுத்து கொண்டு சாலைகளில் வரவேண்டாம் என்று எச்சரித்து வருகின்றனர். கல்வீசித் தாக்குதல், வாகனங்களுக்கு தீ வைத்தல், சூறையாடல் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

உங்கள் பகுதி நிலவரம் என்ன?

இந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களாகிய நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்கள் பகுதியில் சாலைகளின் நிலை, போக்குவரத்து பாதிப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், இடர்ப்பாடுகளின் நிலை என்ன என்று நீங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் அவை உடனுக்குடன் வெளியிடப்படும்.

உங்கள் நலன் குறித்த அக்கறையோடும், உங்களுக்கான விழிப்புணர்வுக்காவும், உங்கள் மீது கவனம் கொண்ட நபர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் மட்டுமே இந்த கருத்துப் பகிர்வு.

இந்த பகிர்வு உங்கள் பகுதியைச் சுற்றி இருக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள் பகுதி நிலவரத்தை உடனே கீழே உள்ள கருத்துப் பகிர்வில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் இந்தப் பகிர்வுகள், மக்களுக்கு விழிப்புணர்வுக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.

SCROLL FOR NEXT