பட அதிபர் மதன் உயிருடன்தான் உள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரி வித்துள்ளது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இன்னும் 2 வாரத்தில் மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாவிட்டால் விசா ரணையை வேறு அமைப்பிடம் வழங்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே 28-ம் தேதி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். இது தொடர்பாக அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மதனைக் கண்டுபிடிக்க சென்னை காவல்துறை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விசாரணை அறிக் கையை தாக்கல் செய்து, மதனின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய் துள்ளதாக கூறினார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘மதன் உயிருடன் இருக் கிறாரா? இல்லையா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்’’ என்றனர்.
அதற்கு ராதாகிருஷ்ணன், ‘‘இது வரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர் உயிருடன்தான் இருக்கிறார். அவரை நெருங்கி விட்டோம். மதனை நேரில் ஆஜர்படுத்த இன்னும் ஒருமாதம் கால அவகாசம் வேண்டும்” என கோரினார். அதற்கு நீதிபதிகள், மதன் மாயமாகி 2 மாதங்களாகி வி்ட்டது. இன்னும் அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தவில்லை. நாங்கள் 2 வாரம் அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் மதனை கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்தவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.