சென்னை சேத்துப்பட்டு ஏரி யில் படகு குழாம் வசதி ஏற் படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு மீன் காட்சியகம் அமைக் கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணி களை மீன்வளத்துறை அமைச் சர் ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
சேத்துப்பட்டு ஏரியில் படகு குழாம் அமைக்கப்பட்ட பின் இங்கு சனி, ஞாயிற்றுக்கிழமை களில் 2,000 முதல் 3,000 பேர் வரை வருகின்றனர்.
அதற்கு 2-ம் கட்டமாக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டு, முப்பரி மாண வீடியோக்களை காட்சிப் படுத்தும், 'விர்சுவல் ரியாலிட்டி' மையம் மற்றும் மீன் காட்சியகம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. மழையை நம்பித்தான் சேத்துப்பட்டு ஏரி உள்ளது.
இருப்பினும், ஏரியில் நீர் இருப்பு குறையாமல் இருக்க வழிவகை செய்யப்படும். சேத்துப்பட்டில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது போன்றே சென்னையில் உள்ள பிற ஏரிகளையும் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.