தமிழகம்

இட ஒதுக்கீட்டுக்காக ஜன-21.ல் போராட்டம்: திமுக அறிவிப்பு

செய்திப்பிரிவு

சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகள், அலுவலர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை கண்டித்து ஜனவரி 21-ல் திமுக போராட்டம் நடத்தும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

தென் சென்னையில், திமுக மாணவர் அணியினர் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி சாடல்: சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகள், அலுவலர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது, சமூக நீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி என்று சில தினங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி சாடியிருந்தார். மேலும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில், திமுக தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது என்று அவர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 21-ஆம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT