தமிழகம்

ஜிஎஸ்டிக்கு எதிராகப் போராடுவேன்: டி.ராஜேந்தர் பேட்டி

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டிக்கு எதிராகப் போராடுவேன் என்று இயக்குநர், நடிகர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கேளிக்கை வரி இல்லை என்ற சூழலில் கூட சின்ன பட்ஜெட் படங்கள் ஓடவில்லை. இப்படி இருக்கும்போது சினிமாவுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதித்தால் சின்ன பட்ஜெட் படங்கள் ஓடாது. மக்கள் தலையில் இவ்வளவு வரி சுமத்தினால் அவர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு எப்படி வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தியேட்டரில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. பார்கார்ன், கூல்டிரிங்ஸ் போன்றவற்றுக்கான கட்டணம் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் சினிமா என்பது அங்கீகரிக்கப்பட்ட தொழில். ஆனால், இந்திப் படங்களையும் தமிழ்ப் படங்களையும் சமமாக ஒப்பிட முடியாது. வங்கியில் கடன் வாங்கி இந்திப் படங்கள் எடுக்கப்படுகின்றன. தமிழ்ப் படங்களுக்கு வங்கியில் கடன் கொடுப்பதில்லை.

ஜிஎஸ்டி வரியால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பிராந்திய மொழிப் படங்கள் அழியும் ஆபத்து உள்ளது. கள்ள நோட்டு வைத்திருந்தால் குற்றம். ஆனால், திருட்டு விசிடி உருவாக்குவதும், அதை விற்பதும் குற்றம் இல்லையா? ஜிஎஸ்டிக்கு எதிராகப் போராடுவேன், குரல் கொடுப்பேன்'' என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT