தமிழகம்

தூர்வாராதது, ஆக்கிரமிப்பை அகற்றாததால் நீர்நிலைகளின் கொள்ளளவு 30 சதவீதம் குறைந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தூர்வாரப்படாத தாலும், ஆக்கிரமிப்பு அகற்றப் படாததாலும் நீர்நிலைகளின் கொள்ளளவு 30 சதவீதம் குறைந் துள்ளது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்து ஏரிகள், குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆறுகள், கால்வாய்களும் சமீபகாலத்தில் முறையாக தூர் வாரப்படவில்லை. காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்காத தாலும், கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறை வாக மழை பெய்திருப்பதாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, நீர்நிலைகள் தூர்வாரப்படா ததாலும் விவசாயம் பாதிக்கப்பட் டுள்ளது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்படாத தாலும், அவற்றில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும் நீர்நிலைகளின் கொள்ளளவு 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.

புதிய அமைச்சகம் தேவை

கடந்த காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஏரி, குளங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து கோடைகாலத்தில் தூர்வாருவது வழக்கம். குடிமராமத்து என்ற பெயரில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும். தொடர் வலியுறுத்தல் காரணமாக தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். ஆனாலும், ரூ.100 கோடி செலவில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் உள்ள 1,519 பணிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத் தில் உள்ள அனைத்து ஆறு, கால்வாய், ஏரி, குளம் உள் ளிட்ட நீர்நிலைகளை பாசனதாரர் களுடன் இணைந்து தூர்வாரும் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

அத்துடன், பாசனம் சார்ந்த பணிகளை கவனிக்கவும், நீர் மேலாண்மை மேற்கொள்ளவும் பொதுப்பணித் துறையை பிரித்து நீர்வள மேலாண்மை என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT