தமிழகம்

சட்டப் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் சென்னை, செங்கல் பட்டு. வேலூர், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 5 ஆண்டு பிஏ.எல்எல்பி படிப்பில் 1,052 இடங்களும், 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் 1,262 இடங்களும் இருக்கின்றன.

5 ஆண்டு படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும், 3 ஆண்டு படிப்புக்கு பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) 5 ஆண்டு, 3 ஆண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (திங்கள்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. கட்டணம் செலுத்துவதற்கான வங்கி செலானை சட்டக் கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்தோ பெறலாம். அந்த செலானை இந்தியன் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும்.

செலான் பிரதியை சட்டக் கல்லூரியில் கொடுத்து விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டு படிப்புக்கான விண் ணப்பங்களை ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள்ளும், 3 ஆண்டு படிப்புக்கான விண்ணப்பங் களை ஜூலை 15-ம் தேதிக் குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT