மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கு முறையாக வாடகை தராத தால் அதிகாரிகள் அதனை மீட்டனர்.
இது தொடர்பாக கபாலீஸ் வரர் கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 297 சதுர அடி பரப்புள்ள வணிக நோக்கிலான மனை சென்னை அண்ணா சாலை பெருமாள் முதலி தெருவில் உள்ளது. இது நடேச நாயக்கர் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. அற நிலையத்துறை நிர்ணயம் செய் துள்ள நியாயமான வாடகை மற்றும் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று வாடகைதாரருக்கு பலமுறை வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்புகளை பெற்றுக் கொண்ட வாடகை தாரர், இது தொடர்பான வழக்கிலும் ஆஜராகவில்லை.
எனவே, வாடகைதாரரின் வாடகை உரிமை ரத்து செய்யப் பட்டு, வாடகைதாரரை வெளி யேற்ற அறநிலையத்துறையின் சென்னை இணை ஆணை யருக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. இதன்பேரில், விசாரணை நடத்திய இணை ஆணையர் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளரை வெளி யேற்ற உத்தரவிட்டார்.
இதன்பேரில், கபாலீஸ் வரர் கோயில் இணை ஆணை யர், இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் காவல்துறை உதவியோடு, சம்பந்தப்பட்ட இடத்தை ஆக்கிரமித்திருந்த பிரதீப் என்பவரை வெளி யேற்றினர்.