தமிழகம்

ரயில் நிலையங்களில் நாளை முதல் அதிரடி சோதனை

செய்திப்பிரிவு

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களைப் பிடிக்க சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட மின்சார ரயில் நிலை யங்களில் நாளை முதல் 15-ம் தேதி வரை சிறப்பு படையினர் அதிரடி சோதனை நடத்த உள்ளனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

விரைவு ரயில்கள், மின்சார ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களைப் பிடிக்க பல்வேறு ரயில் நிலை யங்களில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. ரயில்வே வரு வாயை அதிகரிக்கும் வகையில் இந்த சோதனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட் டுள்ளன.

சென்னை கோட்டத்தில் வரும் 11-ம் தேதி (நாளை) முதல் 15-ம் தேதி வரை அனைத்து மின்சார ரயில் நிலையங்களிலும் சிறப்பு படையினர் மூலம் சோதனை நடத்தப்பட உள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அபராதம் விதிக்கப் படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT