‘தி இந்து’வின் இணைப்பிதழ்களில் ஒன்றான ஆனந்த ஜோதி பக்கத்தின் சிறப்புக்கூறுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப் பட்டுள்ள ‘ஆனந்த ஜோதி’ என்ற பெயரிலான புத்தகம், கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.
கோவை கிக்கானி பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெற்ற ‘நெஞ்சம் மறப்ப தில்லை - கண்ணதாசனின் துள்ளல் தமிழ் இசை’ என்ற நிகழ்ச்சியின் தொடக்கமாக புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
புத்தகத்தை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.கிருஷ்ணன் வெளியிட்டார். அதனை எழுத்தாளரும் தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவருமான மரபின் மைந்தன் முத்தையா, மூத்த வழக்கறிஞர் என்.வி.நாகசுப்ரமணியம் ஆகி யோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் ‘தி இந்து’ இணைப்பிதழ் களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் பேசியதாவது:
‘தி இந்து’வில் வரக்கூடிய ஒவ்வொரு இணைப்பிதழ்களும் தனித்தன்மை கொண்டவை. வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு இணைப்பிதழ் என 9 இணைப் பிதழ்களை கொடுக்கிறோம். ஞாயிறு அன்று கலை ஞாயிறு என்ற உள் இணைப்பிதழையும் சேர்த்தால் 10 இணைப்பிதழ்கள் ஆகும்.
ஒவ்வொரு இணைப்பிதழை யும் ஒரு குறிப்பிட்ட விஷயத் துக்காக அர்ப்பணித்துள்ளோம். மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆன்மிகம், சினிமா, இளைஞர்கள், உடல்நலம், சொந்த வீடு எனப் பிரித்துள்ளோம். இதில், வியாழக்கிழமை வரும் ஆனந்த ஜோதியை கவனித்து இருப்பீர்கள்.
ஆன்மிகம் பல அம்சங்களைக் கொண்டது. முதலாவது, வழி பாட்டு முறை. கடவுளை வழி படுவது, கோயிலுக்குச் செல்வது, பண்டிகை, விரதம் போன்றவை இதனுள் அடங்கும். அடுத்தது, தத்துவம். கடவுள் யார், ஏன் வழிபட வேண்டும், நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்பது குறித்து அடங்கும். மூன்றாவது, உலகில் எப்படி நடந்து கொள்வது, நம் முடைய அணுகுமுறை பற்றியது. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் ஆன்மிகம்.
ஆன்மிகம் இங்கு உள்ள மைய நீரோட்டத்தைச் சேர்ந்த பெரிய மதம். மனித வாழ்க்கை யில் பல்வேறு சமயம், அவர் களின் தத்துவம், மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கும். எல்லா மதங்களுக்கும் எல்லா சமயங்களுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட நம்பிக்கை, தத்துவங் கள் உண்டு. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு நம்பிக்கை கொண்டது.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர் களுக்குக்கூட ஒரு தத்துவம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தத்து வத்தை மட்டும் நாம் கவனம் செலுத்தாமல், அனைத்துத் தத்துவங்களையும் ஆனந்த ஜோதி இணைப்பிதழில் உள்ளடக்கி உள்ளோம். இந்து, பவுத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்தையும் 4 பக்கங்களில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அணுகி உள்ளோம்.
ஆன்மிகப் பார்வையை ஒரு மதத்தோடு மட்டும் சுருக்காமல் பன்முகத் தன்மையுடன் பல்வேறு மதங்களையும் இணைத்துக் கொடுக்கிறோம். இதன் பிரதிபலிப் பாகத்தான் ஆனந்த ஜோதியின் ஒரு தேர்வு செய்யப்பட்ட பகுதியை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளோம் என்றார்.
மரபின் மைந்தன் முத்தையா பேசும்போது, “கண்ணதாசனின் நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்ச்சியுடன் ஆனந்தஜோதி புத்தக வெளியீடு நடந்தது குறித்து நீங்கள் வேற்றுமையாக நினைக்க லாம். ஆனால், இந்த இரண்டுக் கும் ஓர் ஒற்றுமை உண்டு. கண்ண தாசன், ஆன்மிகம் குறித்தும் எழுதி யுள்ளார். ஆனந்தஜோதி என்ற படத்துக்கும் பாட்டு எழுதியுள்ளார். அதுதான் ஒற்றுமை” என வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
என்னென்ன சிறப்புகள்?
‘தி இந்து’ சார்பில் வெளியிடப் பட்டுள்ள ‘ஆனந்த ஜோதி’ புத்தகம், பல்வேறு தலங்களின் கடவுள் தரிசனங்கள், சமயங்களின் தத்துவம், ஆன்மிகப் பயணங்கள், பண்டிகைகள், சம்ஸ்காரங்கள், அனுஷ்டானங்கள், யாத்திரைகள், விரதங்கள் குறித்து எடுத்துரைக் கப்பட்டு உள்ளன.
கிடைக்கும் இடங்கள்
அனைத்தையும் முழுமையாக் கும் பிள்ளையார் சுழி, ஒளியை அருளும் அண்ணாமலையார் உள்ளிட்ட பொருள் கொண்ட தலைப்புகளுடன் புத்தகம் பல் வேறு ஆன்மிக விஷயங்களை மொத்தம் 130 பக்கங்களில் எடுத் துரைக்கிறது.
இந்த புத்தகக்தின் விலை ரூ.80. இந்த புத்தகத்தை ‘தி இந்து’ அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், கடைகளுக்கும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
வெளியான புத்தகங்கள்
‘தி இந்து’ ஏற்கெனவே நம் மக்கள் நம் சொத்து, மெல்லத் தமிழன் இனி..!, நீர் நிலம் வனம் - கடல், வேலையைக் காதலி, வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள், மண் மனம் சொல்லும் மாவட்ட சமையல், ஆங்கிலம் அறிவோம் - பாகம் 1 மற்றும் 2, நம் கல்வி நம் உரிமை, ஜெயகாந்த னோடு பல்லாண்டு, வீடில்லாப் புத்தகங்கள், மனசுபோல வாழ்க்கை, தொழில் கலாச்சாரம், ஸ்ரீ ராமானுஜர் 1000 ஆகிய புத்தகங்களை வெளியிட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஆனந்த ஜோதி புத்தகமும் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.