தமிழகம்

விவசாயிகள் தற்கொலை இல்லாத ஆண்டாக மாற்றுவோம்: 2017-18 நிழல் நிதிநிலை அறிக்கையில் பாமக தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 2017-18-ம் ஆண்டை விவசாயிகள் தற்கொலை இல்லாத ஆண்டாக மாற்றுவோம் என்று பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாமக சார்பில் 2017-18-ம் ஆண்டுக்கான ‘வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை’ வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் ராம தாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் வேளாண் நிழல் நிதிநிலை அறிக் கையை வெளியிட்டனர். இந் நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

தமிழகத்தில் 2017-18-ம் ஆண் டை விவசாயிகள் தற்கொலை இல் லாத ஆண்டாக மாற்ற வேண் டும் என்பதே இந்த வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையின் நோக்கம். விவசாயிகளின் தற் கொலைகளைத் தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப் படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு இழப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். பொதுத் துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.22,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி பாசன மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராம நாதபுரம் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும். சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க சிறப்புச் சட்டம், பனை மரம் பாதுகாப்புக்கு புதிய சட்டம் இயற்றப்படும்.

ஒரு டன் கரும்புக்கு ரூ.4,991, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,021 கொள்முதல் விலையாக வழங்கப் படும். தமிழகத்தில் வேளாண் துறை சார்ந்த பணிகளைக் கவனிக்க வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் சந்தைத்துறை, நீர்வள மேலாண்மை என மொத்தம் 4 அமைச்சகங்கள் செயல்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நிழல் நிதிநிலை அறிக் கையை வெளியிட்ட பிறகு நிருபர் களிடம் ராமதாஸ் கூறும்போது, ‘‘தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, பொரு ளாதாரத்திலும் சமுதாயத்திலும் மேல்நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 2008-ம் ஆண்டு முதல் வேளாண்மைக்காக தனியாக நிழல் நிதிநிலை அறிக் கையை பாமக வெளியிட்டு வரு கிறது. தற்போது 10-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 56 தலைப் புகளில் 226 யோசனை களைச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT