திருமுல்லைவாயல் அனுமன் நகர் அலெக்சாண்டர் தெருவைச் சேர்ந்தவர் கீதா(20). நேற்று முன்தினம் இவரது தந்தை ஏழுமலை(45) அப்பகுதியில் உள்ள பாழடைந்த விட்டில் கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி திருமுல்லை வாயல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்(22), அஜித்குமார்(20), செல்வா(20), சந்தனகுமார்(19), ராகுல்(18) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் மது அருந் தும்போது ஏற்பட்ட தகராறில் ஏழுமலையை கொலை செய் திருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.