சென்னை மாநகராட்சி மயானங் களில் வேலங்காடு, காசிமேடு உள்ளிட்ட மயானங்கள் நவீன மின் மயானங்களாக உள்ளன. இதை ஐசிடபிள்யூஓ நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஏற்கெனவே, தமிழகத்தில் முதல் முறையாக வேலங்காடு மயானத்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை வறட்சி யால் குடிநீர் கிடைக்காமல் பறவை கள் இறப்பை தடுக்கும் விதமாக, மயானங்களில் குடிநீர் கிண்ணங் களை வைக்கும் திட்டம் வேலங்காடு உள்ளிட்ட 7 மயான வளாகங்களில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐசிடபிள்யூஓ நிறுவனத்தின் செயலர் ஏ.ஜெ.அரிஹரன் கூறும்போது, ‘‘சென்னை யில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பல நீர்நிலைகள் வறண்டுவிட்டன. கடும் வெப்பம் நிலவும் நிலையில், பறவைகள் தாகத்தை தீர்த்துக் கொள்ள நீர் இல்லாமல் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக வேலங்காடு, ஓட்டேரி, கண்ணன் காலனி, பாலகிருஷ்ண புரம், வளசரவாக்கம் பிருந்தாவன் காலனி, திருவொற்றியூர், காசிமேடு ஆகிய 7 இடங்களில் உள்ள மயானங் களில் குடிநீர் கிண்ணங்களை வைக்க திட்டமிட்டிருந்தோம். அதன் படி நேற்று, அனைத்து மயானங் களிலும் குடிநீர் கிண்ணங்களை வைத்துள்ளோம். முதல் நாளே பல பறவைகள் வந்து நீர் அருந்திவிட்டுச் சென்றன’’ என்றார்.