தமிழகம்

லோக்-அதாலத்தில் ஒரே நாளில் ரூ.80 கோடி இழப்பீடு

செய்திப்பிரிவு

மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஹூலுவாடி ஜி.ரமேஷ் மேற்பார்வையில், பொதுமக்கள் பயன்பாடு தொடர்பு டைய வழக்குகளுக்கான லோக்-அதாலத் நேற்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ண குமார் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். கார் விபத்தில் படுகாயமடைந்த ஆக்சிஸ் வங்கி ஊழியர் டி.டி.கிருஷ்ணனுக்கு மோட் டார் வாகன விபத்து இழப்பீடாக ரூ. 60 லட்சத்தை, நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் வழங்கினார். உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிக்குமார், சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் ஆர்.எம்.டி. டீக்காராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 62 ஆயிரத்து 423 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அதில் ரூ.9 ஆயிரத்து 50 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ. 80 கோடியே 74 லட்சத்து 96 ஆயிரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.

SCROLL FOR NEXT