தமிழகம்

ஜெ. பிறந்தநாள் பரிசு வழக்கு: சி.பி.ஐ.க்கு 4 வார கால அவகாசம்

ஆர்.ஷபிமுன்னா

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான பிறந்த நாள் பரிசுகள் பெற்ற வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு, சி.பி.ஐ.க்கு 4 வார கால அவகாசம் அளித்துள்ளது. நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்வதற்காக இந்த அவகாசம் கேட்டார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர். சிபிஐ அமைப்பை, அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக மத்திய அரசு மீது புகார் உள்ள நிலையில் இந்த வழக்கிற்காக அவகாசம் கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி பேச்சை மிரட்டும் வகையில் சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் தன் பதில் மனுவை தாக்கல் செய்யாமல் அவகாசம் கேட்டிருப்பதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT