கோயம்புத்தூர் பார்க் குளோபல் பள்ளியுடன் அமெரிக்காவின் ஷிவ் கேரா இன்ஸ்டிடியூட் ஆஃப் லீடர்ஷிப் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் இணைந்து மாணவர்களுக்காக தலைமைப்பண்பு தொடர்பான பாடத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
பார்க் மேலாண்மைக் கல்லூரி மாணவர்களுக்காக போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் (2 ஆண்டு) அல்லது எக்சிகியூடிவ் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் (15 மாதம்) ஆகிய பாடத்திட்டங்களை ஷிவ் கேரா நிறுவனம் வழங்க உள்ளது என்று அதன் நிறுவனர் ஷிவ் கேரா தெரிவித்தார்.
பார்க் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.அனுஷா கூறியதாவது:
உலக அளவில் அதிகம் விற் பனையான ‘யூ கேன் வின்’ என்பது உட்பட 14 நூல்களை எழுதியவர் ஷிவ் கேரா. 20-க்கும் மேற்பட்ட நாடு களில் தலைமைப்பண்பு குறித்த நிகழ்ச்சிகளை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார்.
எழுத்து, திறமை, தெளிவு, நம்பிக்கை, தைரியம், கருத்து பரிமாற்றம் ஆகிய 6 பண்புகளை வளர்க்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, சென்னை பகுதிகளில் இயங்கிவரும் பார்க் கல்விக் குழுமத்தால் இப்படிப்புகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பொறியியல், இதர இளங்கலை பட்டதாரி மாணவர்களும் விரைவில் சேர்க்கப்படுவார்கள். தென்னிந்தியாவில் ஷிவ் கேரா நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு தலைமைப்பண்பு தொடர்பான படிப்பை வழங்கும் முதல் மேலாண்மைக் கல்வி நிறுவனம் பார்க் கல்விக் குழுமம் மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.