தமிழகத்தில் மாணவர்களும், மக் களும் இணைந்து மணல் கொள் ளைக்கு எதிராகப் போராட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் திருவளர்ச் சோலை பகுதியில் காவிரி ஆற் றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை நேற்று பார்வையிட்ட அவர், பின்னர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆறுகளில் இருந்து மணல் அள்ளுவதுதான் வறட்சிக்கு முக்கியக் காரணம். மணல் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதற்காக ஆறுகளில் இருந்து அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால், அதையொட்டி உள்ள அனைத்து குளங்களும் குட்டைபோல மாறிவிட்டன.
கர்நாடகா, கேரளாவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மணல் விற்பனை செய்வதில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மணல் அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மணல் கொண்டுசெல்வதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
அனைத்து ஆறுகளிலும் மணல் அள்ளும் பணிகளை உடனே நிறுத்தாவிட்டால், நிலத்தடி நீர்மட் டம் வெகுவாகக் குறைந்து தமிழகம் பாலைவனமாகிவிடும். காவிரியில் இருந்து தொடர்ந்து மணல் அள்ளப்பட்டதால், அவற்றின் கரைகளில் இருந்த 10 லட்சம் தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், தங்களின் அடுத்த போராட்டம் மணல் கொள்ளையை தடுப்பதற்கே என கூறினர். அதன்படி மாணவர்களும், மக்களும் இணைந்து மணல் கொள்ளைக்கு எதிராக போராட வேண்டும் என்றார்.