தமிழகம்

அந்தமான் படகு விபத்து: உயிர் தப்பிய தமிழக போலீஸ் அதிகாரி பேட்டி

செய்திப்பிரிவு

அந்தமான் தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் உயிர் தப்பிய சென்னை காவல்துறை பயிற்சி மையத்தின் டி.எஸ்.பி. ஆர்.கஜேந்திர குமார் அளித்த பேட்டியில்: "விபத்துக்குள்ளான அகுவா மெரைன் படகில் பயணித்த யாருக்கும் (லைஃப் ஜாக்கெட்டுகள்) பாதுகாப்பு கவசங்கள் தரப்படவில்லை.

பயணிகள் சிலர் பாதுகாப்பு கவசங்கள் அளிக்குமாறு கேட்ட போதும் படகு நிர்வாகிகள் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவையான அளவு செய்யப்பட்டிருப்பதாகவும் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தனர். பாதுக்காப்புக் கவசங்கள் அளிக்கப்பட்டிருந்தால் உயிர் சேதம் குறைந்திருக்கும்.

இது தவிர, படகில் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டனர். ஏற்கெனவே 32 பேர் படகில் இருந்தோம், கடைசி நிமிடத்தில் வட நாட்டைச் சேர்ந்த சிலரும் படகில் ஏற்றப்பட்டனர். படகு கவிழ்ந்து வெகு நேரமாகியும் எந்த உதவியும் கிடைக்கவில்லை"என்றார்.

SCROLL FOR NEXT