உலகில் வாழும் 130 லட்சத்துக்கும் அதிகமான உயிரினங்களில் ஒன்றுதான் மனித இனம். ஆனால், நாம் வாழ எதையும் செய்ய துணிந்துவிட்டோம். ஆறு, ஏரி, குளம், ஓடை, அகழி, அருவி, ஊற்று, கண்மாய், கால்வாய், கிணறு, குட்டை, ஊருணி, சுனை என நீர்நிலைகளுக்கு பெயர்கள் மட்டுமே இருக்கின்றன. எதிலும் நீர் இல்லை. இயற்கை என்பது ஒரு சங்கிலித் தொடர். ஒன்று மற்றொன்றை சார்ந்துதான் வாழ முடியும்.
மனிதர்களாகிய நாம் அந்தச் சங்கிலித் தொடரை அறுத்துக் கொண்டே வருகிறோம். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குப்பை மேடாக இருப்பதால் சைபீரியாவில் இருந்து வரும் பறவைகள் வேறு பகுதிக்குச் செல்கின்றன. இதனால் நமக்குதான் இழப்பு என்பதை உணர வேண்டும். கையில் மஞ்சள் பையை தூக்கிக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்று வந்தவரை இயற்கை நன்றாகவே இருந்தது.
இந்த பூமி காடு, கடல், மலை, நிலம், நீர், காற்று, பூச்சிகள், விலங்குகள் என அனைவருக்கும், அனைத்துக்கும் சொந்தமானது. அடுத்த தலைமுறைக்கு நல்ல காற்று, நல்ல குடிநீர் தருவதே சிறந்த செல்வம். மழைக்காலத்தில் வெள்ளமும், கோடையில் வெப்ப மும் நம்மை வாட்ட இயற்கையை நாம் நேசிக்காமல் போனதே காரணம். சமீபத்திய மழை, வெள் ளம் மனிதர்களிடையே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கைக்கு எதிராக நாம் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள இதுவே சரியான தருணம். இங்கு வந்துள்ள அனைவரும் நல்ல மாற்றத்தின் தூதுவர்கள். நாம் அனைவரும் ஒருங்கிணைந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இயற்கையைப் பாது காக்க எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இதற்காக எங்களின் அகரம் அறக்கட்டளையுடன் இணைந் துள்ள ‘தி இந்து’ நாளிதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன் என்று சூர்யா பேசினார்.