வறட்சியில் வாடும் விவசாயி களுக்கு வழக்கறிஞர்கள் மனமு வந்து உதவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 11-ம் ஆண்டு பொங்கல் விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் சங்கச் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் வரவேற்றார். சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.சுதா, பொரு ளாளர் எஸ்.காமராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த கலாச்சாரத்துக்கேற்ப புத்தாண்டை வரவேற்கிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு புத்தாண் டையும், தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழாவான பொங்கல் பண்டிகையோடு வரவேற்கின்றனர். ஆனால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் இந்தாண்டு பொங்கல் பண்டிகை தமிழக விவசாயிகளுக்கு சிறப்பாக இருக்காது. எனவே வறட்சியால் வாடும் விவசாயி களுக்கு வழக்கறிஞர்களும் மனமுவந்து உதவிட வேண்டும்.
இவ்வாறு பேசிய எஸ்.கே.கவுல் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். விழாவில் பேசிய திரைப்பட இசையமைப்பாளர் ஹிப் பாப் தமிழா ஆதி, ‘‘நான் இங்கு சினிமா பாடல்களைப் பாடப்போவதில்லை. அதேபோல ஜல்லிக்கட்டு விழாவுக்கு என்னு டைய ஆதரவைத் தெரிவிக்கும் மேடையாக இதை எடுத்துக் கொள்கிறேன். நான் இயற்றிய என்னுடைய பாடல்கள் மூலமாக இங்கு ஜல்லிக்கட்டுக்கு உங்களிடம் ஆதரவு திரட்டுகிறேன்’’ எனக்கூறி தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப் புறப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.
விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.எம்.சுந்தரேஷ், புஷ்பா சத்ய நாராயணா, ஆர்.மகாதேவன், எம்.வி.முரளிதரன் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக் குமாரசாமி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ராஜரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக வீரசோழன் கலைக் குழுவினர் நடத்திய தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், கவிஞர் எஸ்.விவேக்கின் கவிதை நிகழ்வும், கவிஞர் கு.ஞானசம் பந்தன் தலைமையில் ‘வாங்க சிரிக்கலாம், சிந்திக்கலாம்’ என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டி மன்றமும் நடத்தப்பட்டது. விழாவை வி.நன்மாறன் தொகுத்து வழங்கினார். சங்க நூலகர் ஜி.ராஜேஷ் நன்றி கூறினார்.