சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் தொடர்பான தகவல்கள் இல்லா ததால் பயணிகள் பெரும் சிரமத் துக்கு ஆளாகின்றனர்.
சென்னையில் 80 லட்சம் பேர் வசிக்கின்றனர். நாள்தோறும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
சென்னையில் தமிழர்கள் மட்டு மல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கணிசமாக வசிக் கின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் கட்டுமானப் பணிகள், ஹோட் டல்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் பணியாற்று கின்றனர். மாநகரில் பேருந்து, ரயில், விமானம் என மூன்று வகையான பொதுப் போக்குவரத்துகள் உள் ளன.
சென்னையில் குறைந்த கட்டணத்தில் ‘ஒயிட் போர்டு’, சற்று கூடுதல் கட்டணத்தில் ‘கிரீன் போர்டு’, அதிக கட்டணத்தில் ‘டீலக்ஸ்’, மிக அதிக கட்டணத்தில் ‘வால்வோ ஏசி’ என நான்கு வகையான பேருந்துகள் இயக்கப் படுகின்றன. பயணிகள் வசதிக்காக சென்னை மாநகர் முழுவதும் நூற் றுக்கணக்கான பேருந்து நிறுத்தங் களைச் சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
இந்த பேருந்து நிறுத்தங்கள் மூலம் வருவாயைப் பெருக்கும் நோக்கம் மட்டுமே மாநகராட்சிக்கு இருக்கிறது. நவீன வடிவமைப்பில் பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத் தப்பட்டு, அதில் பல்வேறு வண்ணங்களில் தனியார் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், யாருக்காக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டதோ அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அவை அமையவில்லை. பேருந்து நிறுத்தங்கள் சில இடங்களில் மட்டும் அழகாக இருக்கின்றன. பல இடங்களில் சரிவர பராமரிக்கப்படாததால் தினசரி பேருந்துகளில் போய் வருவோருக்கு மட்டுமே பேருந்து எண்ணும், இடமும் பரிட்சயமாக இருக்கிறது. பெரும்பாலானோ ருக்கு எந்த எண் கொண்ட பேருந்து எந்த இடத்துக்குச் செல்கிறது என்று தெரிவதில்லை. அதனால் பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள், சாலையில் போய் வருபவர்கள் என பலரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
பேருந்து நிறுத்தத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள எண்களை இரவில் பார்க்க முடிவதில்லை. பேருந்து நிறுத்தத்தில் உள்ள தனியார் விளம்பரம் மட்டுமே மின் னொளியில் ஜொலிக்கிறது. அங்கு பேருந்து எண்கள் எழுதப்பட்டுள்ள பகுதியில் மின்னொளி இல்லாததால் இரவு நேரத்தில் பயணிகள் குறிப்பாக பெண்கள், முதியோர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எழும்பூர், ஐஸ்ஹவுஸ், அண்ணா சாலை போன்ற பல இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்து எண் தவறுதலாக எழுதப்பட்டிருப்பது, ஒரே இடத்தில் 3 பேருந்து நிறுத்தம் இருப்பதால், அதில் எந்த நிறுத்தத்தில் எந்த பேருந்து நின்று செல்லும் என்று தெரியாத நிலை, பேருந்து வந்ததும் அங்கும் இங்கும் ஓடிப் போய் ஏற வேண்டிய அவலம், பேருந்து போய்விட்டால் காத்திருக்கும் நிலை என்பன போன்ற குளறுபடிகளும் இருக்கின்றன.
எனவே, அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் விளம்பரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கா மல் அங்கு நின்று செல்லும் பேருந்து களின் எண்கள் மட்டுமல்லாமல் எண் மற்றும் செல்லும் இடத்தின் பெயர், நேரம் ஆகிய தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
உதாரணத்துக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக அனைத்து தகவல்களு டன் வரைபடம் வைத்துள்ளனர். அதில், மெட்ரோ ரயில் போக்கு வரத்து, ரயில் நிலையங்களின் பெயர்கள் (தமிழ் மற்றும் ஆங்கி லத்தில்) உள்ளிட்ட தகவல்கள் தனித் தனி வண்ணங்களில் உள்ளன.
இதுபோல இல்லாவிட்டாலும், லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பேருந்து களின் எண்கள், அவை செல்லும் இடங்கள், நேரம் பற்றிய விவரங் களைப் பேருந்து நிறுத்தங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் எளிதில் பார்த்து தெரிந்து கொள் ளும் வகையில் எழுதி வைக்க வேண்டியது அவசர அவசியம்.