தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலைச் சேர்ந்த மாலுமிகள் உள்பட 35 ஊழியர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நவம்பர், 12-ம் தேதி ஆயுதங்களுடன் நுழைந்த, அமெரிக்க தனியார் கப்பல் பாது காப்பு நிறுவனத்துக்கு சொந்தமான, 'சீமேன் கார்டு ஓகியோ' என்ற கப்பலை, இந்திய கடலோரக் காவல் படையினர் சிறை பிடித்தனர். கப்பலில் இருந்த, 10 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாது காவலர்களை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில், 65 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதைக் காரணம் காட்டி, அவர்களை ஜாமீனில் விடுவிக்க கோரி, தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதித்துறை நடுவர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.