தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

குமரியை ஒட்டிய தென் தமிழகப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ள நிலையில், குமரியையொட்டிய தென் தமிழகப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியிருக்கிறது. இதனால் புதன்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரண்டு அல்லது மூன்று தடவை லேசானது முதல் மிதமானது வரை மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

          
SCROLL FOR NEXT