மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுவதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால்,காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாசனத்துகாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.42 அடியாக இருந்தது. அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். அணைக்கு நீர்வரத்து 17,106 அடியாக உள்ளது.
டெல்டா பகுதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.