தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மே 16-ம் தேதி நடந்தது. முன்னதாக, ஏப்ரல் 22-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கி, 29-ம் தேதியுடன் முடிந்தது. இறுதியாக 2-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலின்படி, அங்கீ கரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 3,729 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் ஆணைய விதிகளின் படி, ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளரும் அதிகபட்ச மாக ரூ.28 லட்சம் மட்டுமே செல வழிக்க வேண்டும். வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல், வேட்பாளரின் செலவுக் கணக்கை, தேர்தல் ஆணையமும் கண்காணிக் கும். அதே நேரம், தேர்தல் நடக்கும் நாளுக்குள் 3 முறை அப்போ தைய கணக்குகளை, தேர்தல் ஆணை யத்துக்கு வேட் பாளர் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, இறுதிக் கணக்கை, தேர்தல் முடிவு அறிவிக் கப்பட்ட நாளில் இருந்து 30 நாட் களுக்குள் வேட்பாளர்கள் ஆணை யத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
செலவுக் கணக்கை சமர்ப்பிக்க கடந்த ஜூன் 18-ம் தேதி இறுதி நாளாகும். அன்றுவரை, 3,563 பேர் கணக்குகளை சமர்ப்பித்திருந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களைச் சேர்ந்த 17 பேர் உட்பட 163 பேர் தாக்கல் செய்யாமல் இருந்த னர். இதையடுத்து, தேர்தல் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின், பலர் தங்கள் செலவுக் கணக்கு களை தாக்கல் செய்திருந்தனர். இன்று வரையிலும் பலர் தாக்கல் செய்யவில்லை.
இது தொடர்பாக, தேர்தல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5 பேர் உட்பட 84 பேர் இன்னும் தேர் தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இவர்களுக்கு ஆணையம் விளக்கம் கேட்டு நோட் டீஸ் அனுப்பியுள்ளது. விளக்கம் அளிப்பதுடன், கணக்கையும் தாக் கல் செய்ய வேண்டும். இல்லா விட்டால், 3 ஆண்டுகளுக்கு அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாதபடி தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பிக்கும். தற்போதுள்ள நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 26 பேர், சுயேச்சைகள் 53 பேர் தாக்கல் செய்யவில்லை’’ என்றார்.